- டில்லி குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட 4 டாக்டர்கள் பணியாற்றிய அல் பலாஹ் மருத்துவமனைக்கு வரும் நிதி குறித்து விசாரணை நடத்தும்படி அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- டில்லியில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிவிடக்கூடாது, என காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியுள்ளார்.
- இந்தியா – ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இருமுனை போருக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
- காஷ்மீரில் வசிப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. ஒரு சிலரால் தான் அமைதியும், சகோதரத்துவமும் கெடுகிறது, என அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
- ‘தென்கிழக்கு வங்கக்கடலில், வரும் 21ல் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது’ என, வானிலை ஆய்வுத்துறை அறிவித்துள்ளது.
- டில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு கிடைக்கப் போகும் தண்டனை, இந்தியாவில் மீண்டும் இதுபோன்ற தாக்குதலை யாரும் நடத்தத் துணியக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
- பஞ்சாபில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் சதி முறியடிக்கப்பட்டது. அந்த அமைப்புக்கு வேலை பார்த்த 10 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
- மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துவிட்டதாக சில தவறான தகவல்கள் வெளிவருவது கண்டிக்கத்தது. இத்தகவலில் எள்ளளவும் உண்மை இல்லை, என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
- தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் கடுமையான வாதங்களை வைக்காமால், இத்தீர்ப்புக்கு வழிவகுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
- ‘நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு நிறைய நேரம் இருக்கிறது. இன்னும் நிறைய தொழில்கள் செய்வேன்” என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
















