- குழந்தைகளின் பாதுகாப்பு கருதி 2,800 நாய்களை கொன்றுள்ளேன். தேவைப்பட்டால் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன் , என மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் சட்டசபையில் பேசியுள்ளார்.
- எனது படம் இடம்பெற்ற டி சர்ட்களை அணிய அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது. அவர்கள் செய்தது எனக்கு பிடிக்கவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறித்து வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்த சர்ச்சையில் சிக்கிய மின்டா தேவி கூறியுள்ளார்.
- தூய்மைப் பணியாளர்களை சந்திக்கக் கிளம்பிய தமிழக பாஜ மூத்த தலைவர் தமிழிசையை போலீசார் தடுத்தனர். ஆனால், என்னை வீட்டை விட்டு வெளியே செல்வதை யாராலும் தடுக்க முடியாது போலீசாரிடம் தெரிவித்தார். போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு கூறிவிட்டு சென்றார்.
- கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு, ஐசிஐசிஐ வங்கி புதிய சேமிப்பு கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- நாய் மேலாண்மைக்கான நிதியை நகராட்சிகளுக்கு பதிலாக நம்பகமான விலங்கு நல அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்து உள்ளார்.
- திமுகவில் இருப்பதால்தான் மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதல்வர் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் இருக்க வேண்டிய இடம் அதிமுகதான், என்று திருப்பத்தூரில் தொண்டர்கள் மத்தியில் பேசிய இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக, பேரம் பேசி 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் புரோக்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
- சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடக்க உள்ளன.
- தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சாவர்க்கர் அவமதிப்பு தொடர்பான வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் எம்பி ராகுலுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், இதன் காரணமாகவே ஆந்திராவில் நடந்த ஓட்டு திருட்டு குறித்து ராகுல் பேசவில்லை என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 August 2025 | Retro tamil
