- அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் சிறுநீர்ப் பையில் ஏற்பட்டுள்ள புற்றுநோய்க்காக கதிர்வீச்சு சிகிச்சையை எடுத்து வருகிறார்.
- எவரோடும் கூட்டு கிடையாது. இந்த நிலத்திலேயே மிக பெரிய கட்சி நாம் தமிழர் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
- பீஹார் சட்டசபை தேர்தலில் 100 இடங்களில் போட்டியிட ஒவைசி கட்சி முடிவு செய்துள்ளது. இது கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகம்.
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி தவெக தொடர்ந்த வழக்கில் அக்.13ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்குகிறது.
- மொழி சிதைந்தால் இனமும், பண்பாடும் சிதைந்து விடும். நம் அடையாளம் அழிந்து விடும். அடையாளம் அழிந்தால், தமிழர் என்று சொல்லும் தகுதியை இழந்து விடுவோம், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
- தவெகவுடன் விசிக கூட்டணி என்பது அதிமுக தரப்பில் பரப்பும் வதந்தி என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- தண்ணீரை, பணம் செலவழிப்பது போல் பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டும்” என கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.
- காசா முழுவதும் 7000 வீரர்களை ஹமாஸ் திரும்ப பெற துவங்கி உள்ளது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.
- காசா போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 Octo 2025 | Retro tamil
