Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 december 2025 | Retro tamil

கோவாவில் 25 பேர் இறந்த இரவு விடுதியின் உரிமையாளர்கள் ஒரே முகவரியில் 45 போலி நிறுவனங்களை ஆரம்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

இண்டி கூட்டணியின் பதவி நீக்கத் தீர்மானம், அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்தும் ஒரு கடின உழைப்பாளி நீதிபதியை அச்சுறுத்துவதற்கான ஒரு முயற்சியே தவிர வேறு ஒன்றுமில்லை என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு, ராணுவ சட்டத்தை மீறிய வழக்கில் சிக்கிய பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) பைஸ் ஹமீத்திற்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது ராணுவ நீதிமன்றம்.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த சுமார் 12.68 லட்சம் இமெயில் கணக்குகள் ஸோகோ நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வர்த்தகம், எரிசக்தி குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி போனில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணின் அடிப்பகுதி ஆகம விதிமுறைப்படி உள்ளது. இது தீபத்தூண் என அதில் எழுதப்பட்டுள்ளது என டாக்டர் ஜேஎஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

அனைவரும் ஹிந்துக்கள் மீதே குறி வைக்கிறார்கள் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் குற்றம்சாட்டியுள்ளார்.

இண்டி கூட்டணியின் பதவி நீக்கத் தீர்மானம், அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்தும் ஒரு கடின உழைப்பாளி நீதிபதியை அச்சுறுத்துவதற்கான ஒரு முயற்சியே தவிர வேறு ஒன்றுமில்லை என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6 சதவீதம் அதிகம் பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இபிஎஸ் இடம் ஏதும் பேசவில்லை. சிறப்பாக பொதுக் குழுவை நடத்தி முடித்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version