- திமுக அரசைப் பொறுத்தவரை ஊழல் செய்வதுதான் முதல் பணி, என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
- துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 452 ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.
- திமுகவுக்கு மாற்றாக தேஜ கூட்டணியை தான் மக்கள் நம்புகிறார்கள். எதிர்பார்க்கிறார்கள், என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- தமிழகத்துக்கு வந்த வெளிநாட்டு முதலீடு குறித்து வெளிப்படையாக ஏன் அறிக்கை வெளியிடுவதில்லை என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
- ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு டில்லி சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் , மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
- ஆபரேஷன் சிந்துாரின்போது இரவு பகலாக 400க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் உழைத்தனர் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
- துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா, ஊழல் வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்று ஆறு மாதம் மருத்துவமனையில் இருந்துவிட்டு ஜாமினில் வெளியே வந்த நிலையில், அவரை ஓராண்டு சிறையில் அடைக்கும்படி, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாச்சல்லுக்கு ரூ.1,500 கோடியும், பஞ்சாபுக்கு ரூ.1,600 கோடி நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
- ரூ.273 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, டில்லி மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அமலாக்கத்துறை இன்று சோதனைகளை நடத்தியது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 10 SEP 2025 | Retro tamil
