- ரஜினி நடித்துள்ள, கூலி திரைப்பட டிக்கெட் கட்டணம், அரசு நிர்ணயித்ததை விட பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
- தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநராக ஏ.சோமசுந்தரம், மருத்துவ ஊரக நல பணிகள் இயக்குநராக டி.கே.சித்ரா நியமிக்கப்பட்டுஉள்ளனர்.
- மத உணர்வுகளை புண்படுத்தியதாக, பா.ஜ., – எம்.பி., நிஷிகாந்த் துபே மீது ஜார்க்கண்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அம்மாநில தலைமை செயலர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.,க்கு எதிராக, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அவர் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார்.
- பறவை எச்சத்தால், சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுவதால், பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்க வேண்டாம் என டில்லி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
- மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட நெட்வொர்க் பிரச்னை காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
- நீண்ட நாட்களாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர புடினை சந்தித்து, அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், ‘எங்கள் நாட்டு நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்’ என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார்.
- பஞ்சாப்பில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு முதல்முறையாக சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டதற்கு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
- சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதற்கு பதிலடியாக இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தன் வான்வெளியை மூடியது. இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு ரூ 410 கோடி ( இந்திய மதிப்பில் 127 கோடி ரூபாய்) நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
- பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக காங்கிரஸ் எம்பி ராகுல், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது.
- உக்ரைனியர்கள் இல்லாமல் உக்ரைனின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடாது, என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.