- முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் துவங்கிய திருப்திபடுத்தும் அரசியல் காரணமாக தேசிய பாடலான வந்தே மாதரம் ஓரங்கட்டப்பட்டது. இது இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
- முதல்வர் பதவியில் அமர எங்களிடம் ரூ.500 கோடி இல்லை என்று கூறிய நவ்ஜோத் சிங் சித்து மனைவியை காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.
- தி.மு.க., வெற்றிக்கு சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், நம் எதிரிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது. சி.பி.ஐ., ஈ.டி., ஐ.டி., மற்றும் தேர்தல் கமிஷனை, நமக்கு எதிராக பயன்படுத்துவர்’ என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
- தீயணைப்பு துறை துணை இயக்குனரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்க வைக்க போலி ரெய்டுக்கு திட்டமிட்ட வழக்கில் மூன்று தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- இண்டிகோ விமானத்தினுள் புறா ஒன்று பறந்த சம்பவம், பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும், திகைப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
- இந்தியா இறையாண்மைமிக்க நாடு, பலன் கிடைக்கும் இடத்தில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அந்நாட்டிற்கு உரிமை உண்டு என ரஷ்யா தெரிவித்துள்ளது.
- சீனாவுக்கு விமானப் பயணம் செல்லும் போது இந்தியர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
- பாலியல் வழக்குகளில் விசாரணையின் போது, நீதிமன்றங்கள் சர்ச்சைக்குரிய வகைகளிலும், பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், அதனை நிறுத்துவதற்கு விதிமுறைகளை வகுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
- சத்தீஸ்கரில் ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சல் தலைவன் சரண் அடைந்துள்ளான். அவனுடன் மேலும் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த 11 பேரும் சரண் அடைந்துள்ளனர்.
- வந்தே மாதரம் பாடலை அன்று முன்னாள் பிரதமர் நேரு அவமதித்தார். இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், விவாதத்தின் போது பார்லிமென்டுக்கு வராமல் அவமதித்துள்ளார், என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 09 december 2025 | Retro tamil
