- அமெரிக்க வரி விதிப்புகளுக்கு நீதிமன்றம் தடை விதித்தால், 1929ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியை போல் மீண்டும் ஏற்படும், என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
- உலக அளவில் இந்தியா விரைவில் மிகப்பெரிய சந்தையாக மாறக்கூடும் என ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் தெரிவித்து உள்ளார்.
- பிரபலமான மன் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் ரூ.34 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- மாமல்லபுரத்தில் நாளை நடக்கும் பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை எனக் கூறியுள்ள சென்னை ஐகோர்ட், அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
- வறுமை இல்லாத மாநிலமாக., சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
- நாட்டிலேயே மிக நீளமான சரக்கு ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.
- கடலூரில் அரசு ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, மிரட்டல், வன்முறை ஆகியவற்றை இயல்பாக்கும் வகையில் அரசியல் கலாசாரத்தை திமுக உருவாக்கி உள்ளது, எனக்கூறியுள்ளார்.
- இந்தியா யாருக்கும் அடிபணியாது என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியா வருமாறு புடினுக்கு அழைப்பு விடுத்தார்.
- வாக்காளர் பட்டியல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் உறுதியாக இருந்தால் ராகுல் சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்து போட வேண்டும். இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.