- தி.மு.க., ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை, இதுதான் தமிழகத்தில் நான்கு ஆண்டு சாதனை என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
- தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சாரங்கபாணிபேட்டையில், 400 ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோவிலுக்கு, கிராம மக்கள் சொந்த செலவில் திருப்பணி செய்துள்ளனர்.
- ஈ.வெ.ரா.,வை கொள்கை வழிகாட்டியாக விஜய் ஏற்கிறார். எங்களது கொள்கை வேறு, வழி வேறு. அதனால் அவருடன் இணைந்து வேலை செய்வது ரொம்ப கடினம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
- சமூக நீதி போராட்டத்தின் பலன் தான் இன்று நாம் பார்க்கும் தமிழகம். ஓரணியில் தமிழகம் என மாணவர்கள் திரள வேண்டும். என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- உலக கோப்பை வில்வித்தை போட்டியில் கூட்டு கலப்பு அணி பிரிவில் இந்திய ஜோடியான ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா ஒட்டுமொத்தமாக 1431 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்துள்ளது.
- தலைநகர் டில்லியில் உள்ள வீட்டில், தீயில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணி நீக்கும் செய்யும் மத்திய அரசின் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மலையாளத்தில் வெளியான ”ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்” என்ற படத்தின் எதிரொலியாக, பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் வரிசை வரிசையாக அமரும் முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடைசி பெஞ்ச் என்பது இல்லாத வகையில் அரைவட்ட வடிவில் மாணவர்கள் உட்கார வைக்கப்படுகின்றனர்.
- அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைப் போல ஆள்மாறாட்டம் செய்து வெளிநாட்டு மற்றும் அமெரிக்க அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள மோசடி கும்பல் ஏ.ஐ.,யை பயன்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு மேளம் கொட்டி பிரதமர் மோடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபிஹ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.