- பிரதமர் மோடி அறிவித்த ஜிஎஸ்டி மறுசீரமைப்பு மூலம் விலை குறைய உள்ள பொருட்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஷாம்பு, பற்பசை முதல் கார்கள் வரை விலை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார்கள் மீது, விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காவல் துறைக்கு, உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அரசியல்வாதிகள் மீதான வழக்குகளில் மட்டும் விசாரணை ஏன் தாமதமாகிறது’ என, கேள்வி எழுப்பியது.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு பயனுள்ளதாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் பயணித்த விமானம் பல்கேரியாவில் பறந்து செல்கையில் ஜிபிஎஸ் சிக்னல் ‘ ஜாம்’ செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னணியில் ரஷ்யா இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
- ராகுல் பொறுப்பற்றவர் என்பதை நாடு உணர வேண்டும்: அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு தேர்தலில் என்ன செய்யும் என்று பாஜ மூத்த தலைவரும், எம்பியுமான ரவிசங்கர் பிரசாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
- கோல்கட்டாவில் ராணுவத்துக்கு சொந்தமான இடத்தில் திரிணமுல் காங்கிரஸ் அமைத்து இருந்த போராட்ட மேடையை ராணுவம் அகற்றியது. பல முறை நினைவூட்டியும் அகற்றாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், இதனை ஏற்காத மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராணுவம் மூலம் மத்திய அரசு தங்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
- தமிழகம் முழுவதும் பல மாநகராட்சிகளில் ஊழல் செய்த பணத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகிறார்கள்,” என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
- சென்னையிலிருந்து, அந்தமான் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அங்கு நிலவிய மோசமான வானிலையால், தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பி வந்தது.
- ரஷ்யா மற்றும் சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேச்சு நடத்திய நிலையில், ‘இந்தியாவுடன் மிகக் குறைந்த அளவில் மட்டுமே வணிகமே செய்கிறோம். அவர்கள் எங்களுடன் அதிகமாக வணிகம் செய்கிறார்கள்’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் புலம்பல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தில் ரூ. 3201 கோடி ரூபாய் முதலீட்டில் 6250 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் ஜெர்மனியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 02 SEP 2025 | Retro tamil
