- அனுமதிக்கப்பட்ட இடத்தில் நின்று பேசியதை தவிர நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திக்க வருகிறேன், என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
- காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு உருவாக்கப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள ஹமாஸ் அமைப்புக்கு 4 நாட்கள் மட்டும் அவகாசம் அளிக்கப்படும், என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
- எனக்கு வரிகள் ரொம்பப் பிடிக்கும். மிக அழகான வார்த்தை. வரி விதிப்பதால் நாங்கள் மிகப்பெரிய பணக்காரர்கள் ஆகியுள்ளோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- எச்1 பி விசா கட்டண உயர்வு எதிரொலியால், சர்வதேச திறன் மையங்கள் அதிகம் உள்ள இந்தியாவுக்கு, பல முக்கிய பணிகளை மாற்றுவது குறித்து அமெரிக்க நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.
- அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்க தயாராக இருப்பது முக்கியம் என முப்படை தளபதி அனில் சவுகான் தெரிவித்து உள்ளார்.
- கரூரில் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும், வேலுசாமிபுரம் ஒதுக்கப்பட்டது, ஆம்புலன்ஸ்கள் வருகை குறித்து தமிழக அரசு அதிகாரிகள், டிஜிபி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் வீடியோ வெளியிட்டு ஆதாரத்துடன் விளக்கம் அளித்தனர்.
- கரூர் துயர சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகளின் பேட்டி, ஒரு நபர் கமிஷனின் விசாரணையை பாதிக்கும்,என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
- ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டை முன்னிட்டு இன்று டில்லியில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
- தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- விஜய் பிரசாரத்துக்கு பெரிய இடம் கொடுத்து இருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது, என கரூரில் தேஜ கூட்டணி எம்பிக்கள் குழு நிருபர்கள் சந்திப்பில் ஹேமமாலினி தெரிவித்தார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 01 Octo 2025 | Retro tamil
