- இந்திய பொருளாதாரம் இறந்த நிலையில் உள்ளதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறிய நிலையில், காங்கிரஸ் எம்.பி.,க்களான சசி தரூர் மற்றும் ராஜிவ் சுக்லா ஆகியோர் இந்திய பொருளாதாரத்தின் பலத்தை எடுத்துக் காட்டி உள்ளனர்.
- ஆகஸ்ட் மாதம் இயல்பு மழையும், செப்டம்பரில் இயல்பை காட்டிலும் கூடுதல் மழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
- லாக் அப் மரணங்களை, தமிழக அரசு மூடி மறைக்க முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ட்ரீம் லைனர் விமானம், மேலே பறக்க இருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விமானம் புறப்பட்ட இடத்துக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது.
- அயர்லாந்தில் இந்தியர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது இனவெறி காரணமாக நடந்ததா என விசாரணை நடந்து வருகிறது.
- அரசியலில் எதுவும் நடக்கலாம்,” என முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறினார்.
- ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில் சிந்து கிராமம் அருகே செனாப் நதியில் 1,856 மெகாவாட் சாவல்கோட் நீர்மின் திட்டம் அமைப்பதற்காக மத்திய அரசு டெண்டர் விடுத்துள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
- கவினின் தோழி வீடியோவை பார்க்கும் போது அவர் யாரோ சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளார். அப்படி சொல்லச் சொல்லியது போல் தெரிகிறது,” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீது விதித்த வரிகளின் தாக்கங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
- ‘ஜாதியும், மதமும் தான் இங்கு அரசியலை தீர்மானிக்கிறது’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 01 August 2025 | Retro tamil
