- மத்திய பாஜ அரசு என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- ‘லாலு பிரசாத் தன்னுடைய மகன் தேஜஸ்வி யாதவை பீஹார் முதல்வராக்க விரும்புகிறார். சோனியா தன்னுடைய மகனை (ராகுலை) பிரதமராக்க பார்க்கிறார். ஆனால், இந்த இரு பதவிகளும் காலியாக இல்லை,’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள சனே டகாய்ச்சிக்கு தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-ஜப்பான் உறவு அவசியம் என சமூகவலைதளத்தில் மோடி பதிவிட்டுள்ளார்.
- திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சந்தித்து வரும் அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
- உள்ளாட்சித்துறை பதவிகளுக்கு ஊழியர்களுக்கு நியமிப்பதற்கான தேர்வில் ரூ.800 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை பொறுப்பு டிஜிபிக்கு இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
- நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள ரூ.888 கோடி ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
- நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்த பணி நியமன மோசடி தொடர்பாக, அமலாக்கத்துறை அனுப்பியுள்ள கடிதம், பல்வேறு விவரங்களை வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளது. லஞ்சமாக பெற்ற பணத்தை, ஹவாலா முறையில் பரிவர்த்தனை செய்துள்ளனர் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
- 3வது முறையாக நான் அமெரிக்க அதிபர் ஆவதை அமெரிக்க சட்டம் தடை செய்வது மிகவும் மோசமானது என்று அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.
- ஜமைக்காவை சூறையாடிய சூறாவளி மெலிசா, தற்போது கியூபாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இந்த சூறாவளியால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஜமைக்காவை பேரிடர் பகுதியாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
















