- 2026 சட்டசபை தேர்தலில் தவெக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்று நாமக்கல்லில் பிரசாரத்தில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
- திமுக கூட்டணியில் விரிசல் விழும் என்ற இபிஎஸ் ஆசை நிராசையாகும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- திமுக – காங்கிரஸ் இடையே ஏற்பட்ட மோதலுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், இன்று காங்கிரஸ் எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேச்சு நடத்தினார்.
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொலைத்தொடர்பு கருவிகளைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட 4ஜி பிஎஸ்என்எல் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
- கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- காசா ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
- ”திமுக எப்போதுமே பெண்களை மதிப்பதில்லை” என வட இந்திய பெண்கள் குறித்து திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் பேச்சுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
- பயிர் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. மக்காச்சோளம், கரும்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு மன்றாடியது என்று கூறி, ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.
- சென்னையில் இன்று (செப் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
















