- எதிர்க்கட்சிகள் பிரிந்து இருப்பதால் மீண்டும் திமுகவுக்கு வாய்ப்பு என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறி உள்ளார்.
- தோல்விக்கு இப்போதே முதல்வர் ஸ்டாலின் காரணம் தேடுகிறார் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- மோந்தா புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (அக் 27) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அக்கட்சித் தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் இன்று (அக் 27) ஆறுதல் தெரிவித்தார். அவர்களிடம் மருத்துவ செலவு,கல்வி செலவு உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொள்வதாக விஜய் உறுதி அளித்து இருக்கிறார்.
- இரண்டாம் கட்டமாக தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது, என தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் அறிவித்துள்ளார்.
- மோந்தா புயல் தயார்நிலை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடி ஆலோசனை நடத்தினார்.
- கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்திக்க விருப்பம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
- மதுரையில் இருந்து துபாய் கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நடுவானில் பறந்த போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
- சந்திரயான் 3 அனுப்பிய LVM3-M5 ராக்கெட் மூலம் விண்ணிற்கு 4,400 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நவம்பர் 2ம் தேதி இஸ்ரோ அனுப்புகிறது.
- ராஜஸ்தானில் தகவல் தொழில்நுட்பத்துறையில் மூத்த அதிகாரியாக பணியாற்றுபவரின் மனைவி, அரசு ஒப்பந்தங்களை எடுக்கும் இரண்டு தனியார் நிறுவனங்களிடம் வேலைக்கு செல்லாமல் சம்பளம் பெற்றுள்ளார். இதற்கு அவரது கணவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
- மார்ச் 31ம் தேதி, 2026 க்குள் நக்சலிசத்தை ஒழிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


















