- ஊழல் செய்து ஜாமினில் வெளியே வந்த குடும்பத்தின் தலைமையில் காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரியை அதன் தலைமையானது, கழிவறையில் வைத்து பூட்டி அவமானப்படுத்தப்பட்டதை மக்கள் மறக்க மாட்டார்கள் ‘ எனப் பிரதமர் மோடி பேசினார்.
- அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய கூட்டாளிகளுடன் நடந்து வரும் வர்த்தகப் பேச்சு வார்த்தைகளுக்கு மத்தியில், “இந்தியா அவசரமாக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாது” என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
- ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் ஆற்றில் தண்ணீரை தடுக்கும் வகையில் வகையில் தலிபான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
- பீஹார் மாநிலத்தில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மாநிலத்தின் வளர்ச்சி வேகம் அடையும், என தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
- பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 4,500 கன அடியில் இருந்து 6,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் ஒரு வாரத்தில் தொடங்கும் என்று சென்னை ஐகோர்ட்டில் தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
- வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதை அடுத்து, அடையாறு முகத்துவாரப் பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவர் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- சென்னையில் இன்று (அக் 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- அக்டோபர் 27ல் வங்கக்கடலில் புயல் உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு Montha என பெயரிடப்பட்டு உள்ளது.
- ரஷ்யா மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்காவின் அழுத்தம் பலனளிக்காது” என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.


















