- தமிழகத்தில் புதிய டிஜிபி நியமிக்கும் விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை விரைந்து முடிக்குமாறு யுபிஎஸ்சிக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ளார்.
- மன அமைதிக்காக ராமரை தரிசிக்க ஹரித்வார் செல்வதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
- சட்டசபை தேர்தலில் அதிமுக-திமுக இடையே தான் நேரடி போட்டி, அதிமுக 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று இபிஎஸ் கூறி உள்ளார்.
- பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்துடன், முயற்சி மேற்கொண்டுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு என் முழு ஆதரவு எப்போதும் இருக்கும்.
- இன்று காலை முதல் 280 ரூபாய் குறைந்த தங்கம் விலை, மதியம் பவுனுக்கு 720 ரூபாய் அதிகரித்தது. ஒரு பவுன் 80 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
- ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தின் மூலம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 12வது ஆவணமாக ஆதாரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- பிரான்ஸ் நாட்டில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு தலைமையிலான அமைச்சரவை கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
- டில்லியில் ஜெயின் சமூக நிகழ்ச்சியில் ரூ.1.50 கோடி மதிப்பிலான இரு கலசங்களை திருடிச் சென்ற நபரை உத்தரபிரதேசத்தில் போலீசார் கைது செய்தனர்.
 
			

















