- தமிழகத்தில் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இந்தாண்டு முதல் ரத்து செய்யப்படுகிறது. புதிய கல்விக்கொள்கை பரிந்துரை அடிப்படையில் இந்த முடிவை தமிழக அரசு அறிவித்துள்ளது.
- வெறும் அலங்காரத்திற்காகக் கல்விக் கொள்கை என்று திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- ராமதாஸ், அன்புமணி இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆக வேண்டும், என்று ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். பா.ம.க., பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார். ஆனால், ராமதாஸ் நீதிமன்றத்துக்கு வர மாட்டார் என அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
- வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை இபிஎஸ் வாய் திறக்காதது ஏன், என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
- வரிவிதிப்புகளை தவறாக பயன்படுத்துவதற்கு எங்களது எதிர்ப்பு நிலையானது மற்றும் தெளிவானது என்பதை சீனா உறுதிப்படுத்தி உள்ளது.
- எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனத்துக்கு பாதிப்பு என்று எந்த ஒரு புகாரும் இதுவரை வரவில்லை. ஏதேனும் ஒரு நிகழ்வு காட்டுங்க பார்ப்போம், என்று மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சவால் விட்டுச்சொன்னார்.
- பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பார்லிமென்டின் இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
- உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மும்முறை தாண்டுதலில் பிரிட்டனைச் சேர்ந்த ஜொனாதன் எட்வர்ட்ஸின் சாதனை, 30 ஆண்டுகளாகியும் முறியடிக்க முடியாத சாதனையாக இருந்து வருகிறது.
- அரசியலமைப்பு மீது தேர்தல் கமிஷன் தாக்குதல் நடத்தினால், அதற்கு நீங்கள் எதிர்க்கட்சிகளை சந்திக்க நேரிடும். கடந்த 10 ஆண்டு கால வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தலின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை எங்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும், என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசினார்.
- அதிபர் டிரம்ப்பை கையாள்வது எப்படி என பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்குவேன் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.