- தமிழகத்தில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை இன்று (நவ., 04) அமைச்சர் மகேஷ் வெளியிட்டார்.
- கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
- கனடாவில் படிக்க விண்ணப்பித்த 74 சதவீத இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களை கனடா அரசு நிராகரித்துள்ளது.
- இஸ்ரேல் உடனான இந்திய உறவு வலுவானது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
- ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீஹார் தேர்தலில் துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
- கிட்னி முறைகேடு வழக்கில், சுயநல நோக்கோடு செயல்படும் திமுகவிற்கு, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
- கோவை போல இனியொரு சம்பவம் இதுபோல நிகழாது என உறுதி கூறத்தான் முடியுமா? முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
- கணக்கெடுப்பு படிவத்துடன் வரும் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம், அதை வாக்காளர்கள் இன்று பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு, 40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது, என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி கூறினார்.
- கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மேயர் தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால் நியூயார்க் நகரத்திற்கான நிதியை நிறுத்துவேன் என அதிபர் டிரம்ப் அச்சுறுத்தி உள்ளார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் -04 November 2025 | Retro tamil
