- இந்தியா உடன் வர்த்தகத்தை இரு மடங்காக அதிகரிக்க விரும்பும் ஜெர்மனியின் முடிவை பாராட்டுகிறோம், என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
- பாரத் ராஷ்டிரிய சமிதியில் இருந்து நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, இன்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
- 108 ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி பதில் அளிக்கும்படி டிஜிபிக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
- சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்வில் 25 நாடுகளுக்கும் அதிகமான தலைவர்கள் கலந்து கொண்ட விவரம் வெளியாகி இருக்கிறது.
- டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
- அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா 100% வரி விதிக்கிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
- ஜம்முகாஷ்மீர், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
- தீர்வு ரொம்ப சிம்பிள்ங்க. விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என, தெரு நாய் பிரச்னைக்கான தீர்வு குறித்து கமல் தெரிவித்தார்.
- பிரதமர் மோடியையும், அவரது தாயாரையும் அவதூறு செய்த இண்டி கூட்டணியை கண்டித்து செப்.4ல் தேஜ கூட்டணி பீஹாரில் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
- விண்வெளியில் உணவு சாப்பிட கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா தெரிவித்தார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 SEP 2025 | Retro tamil
