- கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தாமரைச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- காசாவில் ஹமாஸ் படையினரின் இரண்டு நிலத்தடி சுரங்கப்பாதையை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அகற்றினர். அந்த சுரங்கப்பாதையில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- காந்த ஏற்றுமதிகள் கட்டுப்படுத்தப் பட்டால், சீனா மீது 200% வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
- செல்பி எடுப்பதில் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
- ஜம்மு-காஷ்மீரின் திரிகுடா மலைகளில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்குச் செல்லும் பாதையில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
- இந்தியாவும், ஆப்பிரிக்க கண்டமும், உண்மையில் கொண்டிருக்கும் நிலப்பரப்பை காட்டிலும் குறுகியதாக உலக வரைபடத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. 450 ஆண்டுக்கும் மேலாக தொடரும் இந்த குளறுபடிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற கோரிக்கை, உலகம் முழுவதும் வலுத்து வருகிறது.
- இந்தியப்பொருட்களுக்கு வரி விதித்த விவகாரம் மோதலாக மாறியுள்ள நிலையில், நான்கு முறை அமெரிக்க அதிபர் டிரம்ப் போனில் பேச முயற்சித்தும், பிரதமர் மோடி ஏற்க மறுத்து விட்டார் என்று ஜெர்மனி நாட்டு பத்திரிகை பரபரப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.
- நம் நோக்கம் சக்தியைக் காட்டுவது அல்ல. இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்புக் கொள்கையை நம்பியதில்லை, என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
- ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட வலியுறுத்தி அழுத்தம் தரப்படுவதால் தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சரத்குமார் சர்மா விலகினார்.
- மதுரை சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, தமிழகம் முழுவதும் வரி விதிப்பு முறையாக செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 27 August 2025 | Retro tamil
