- சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்து, இரு நாட்டு உறவில் சமீபத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடியை பாராட்டுவார் என யூகிக்கிறேன், என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
- ‘காவலர் பதவி உயர்வுக்கான ஆண்டு வரம்பு குறைப்பு, எல்லா காவலர்களுக்கும் பொருந்தாது’ என அறிவிக்கப்பட்டதால், 45,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக, அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
- கூவம், அடையாறு நதிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்பையும் அகற்ற உத்தரவிட்டுள்ளது.
- 20 ஆண்டுகளாக, தீர்வு இல்லாமல் போராடும் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப்-4 தேர்வில் தொடர்ந்து அலட்சியமாக செயல்படுகிறது என்று தமிழக அரசு மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.
- ”வரும் தேர்தலில், 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என தி.மு.க., கனவு காணலாம். ஆனால், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்,” என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறினார்.
- ‘எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது’ என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
- உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக, தமிழக அரசு கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
- ” அமெரிக்க விதிக்கும் புதிய தடைகளை சமாளிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது,” என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில், ராமாயண நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதற்கு அங்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 16 July 2025 | Retro tamil
