*பார்லிமென்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 17 எம்.பி.,க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழகம் வரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., இன்று சந்தித்து பேச உள்ளார்.
* ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் ராகுல் தமது வரலாற்றுத் தவறை உணர்ந்து கொண்டது போல், முதல்வர் ஸ்டாலினும் உணர்ந்து கொள்வாரா? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
* சென்னை அப்போலோ மருத்துவமனையில் 6வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலின் இன்றும் மருத்துவமனையில் இருந்தபடியே அரசு பணியை செய்தார்.
* கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை சம்பவங்கள் பெரும் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், அதைத் தடுப்பதற்கு 15 வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.
* பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் எம்.பி.,க்கள் தலைப்புச் செய்தியாக மாறுகிறார்கள். அதேநேரத்தில் நல்ல உரை நிகழ்த்தும் எம்.பி.,க்கள் செய்தியில் இடம் பெறுவதில்லை என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.
* ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் மூலமாக வட இந்தியா மட்டுமின்றி, கடல் கடந்தும் வெற்றிகளை குவித்தார். அதை நினைவுகூரும் வகையில் பிரதமர் மோடி இக்கோயிலுக்கு வருகை தருகிறார்.
* மத்திய, மாநில அரசுத்துறைகள் குடிநீர் வரி ரூ.63,000 கோடியை பாக்கி வைத்துள்ளதால், உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள போதிய நிதியில்லாமல் டில்லி அரசு திணறி வருகிறது.
* ஓய்வுக்குப் பின் எந்த அரசு பதவியும் ஏற்க மாட்டேன்’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
* தாய்லாந்து-கம்போடியா இடையேயான சண்டை, உச்சக்கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ள நிலையில், இந்தியர்களுக்கான அவசர தொலைபேசி எண்களை தூதரகம் வெளியிட்டு உள்ளது.
* ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர்.