- நக்சல் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 37 பேர் இன்று ஒரே நாளில் தங்களின் ஆயுத நடவடிக்கையை கை விட்டுவிட்டு, சரண் அடைந்துள்ளனர் என்று தெலுங்கானா டிஜிபி ஷிவாதர் ரெட்டி கூறி உள்ளார்.
- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக கவாய் பணியாற்றிய காலத்தில், நீதிபதியாக நியமிப்பதற்கு செய்யப்பட்ட பரிந்துரைகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
- கர்நாடகாவின் பெங்களூருவில் வங்கி ஏடிஎம் வாகனத்தை வழிமறித்து ரூ.7.11 கோடி கொள்ளையடித்த சம்பவத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- வான்கூவரில் இருந்து டில்லி நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் வந்த பயணி, நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.
- உலகளாவிய மருத்துவ குழு, போதைப்பொருள், பயங்கரவாத எதிர்ப்பு குழுவை அமைத்து, இதற்கான சட்ட விரோத பணபரிமாற்றத்தை தடுக்க வேண்டும் என ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.
- நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் கல்வித் தகுதி பறிக்கப்படும், மக்களின் பிரச்னைகள் கேட்கப்படாது, தீர்க்கப்படும் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
- ரஷ்யா உடன் பேச்சு நடத்துவதற்கான அமெரிக்க திட்டத்தை உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கிக்கு அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- டில்லியில் ஐஎஸ்ஐ தொடர்புடைய ஆயுத கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யயப்பட்டது.
- தமிழக சட்டசபை தேர்தலைக் கருதி, திமுக உடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் குழு அமைத்துள்ளது. இதை வரவேற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், ‘அரசல் புரசலான செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
- உலகை நிலைநிறுத்துவதற்கு ஹிந்து சமூகம் மையமாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள பல நாகரிகங்கள் சரிந்துவிட்டன, ஆனால் ஹிந்து சமூகம் ஒரு வலுவான சமூக கட்டமைப்பை உருவாக்கியுள்ளதால் இந்தியா தப்பிப்பிழைத்துள்ளது, என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 22 November 2025 | Retro tamil
