- கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களில் நாளை கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- அரசு வேலை வாங்கி தருவதாக 2.50 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் கலாநிதி மற்றும் அவரின் மனைவி ராஜலட்சுமி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- சென்னையில் வார தொடக்க நாளான இன்று (நவ 17) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.11,540க்கு விற்பனை ஆகிறது.
- தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகள் அமைத்து ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஒரே கட்சி தே.மு.தி.க., மட்டுமே என பொதுச்செயலாளர் பிரேமலதா மதுரையில் பேசினார்.
- நத்தத்தில் இளைஞரை கட்டாயபடுத்தி பாலியல் தொந்தரவு செய்தவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
- சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் டேங்கர் லாரி மோதி 42 பேர் பலியான விபத்தில் ஒரேயொருவர் மட்டும் உயிர் தப்பி உள்ள விவரம் வெளியாகி இருக்கிறது.
- தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் மரண தண்டனை விதிக்கப்பட்டவுள்ளது. இந்தத் தீர்ப்பு பாரபட்சமானது என வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
- சமாஜ்வாதி தலைவர் ஆசம் கான், அவரது மகன் முகமது அப்துல்லா ஆசம் இருவரும் பான் கார்டு வழக்கில் குற்றவாளிகள் என்று கூறி, நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
- இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளும் ‘கருடா’ என்ற வான் பாதுகாப்பு பயிற்சி துவங்கியது.
- ’88 மணி நேர ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வெறும் டிரெய்லர் தான்” என பாகிஸ்தானுக்கு ராணுவத் தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 November 2025 | Retro tamil
