- அமைச்சர்களுடன் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, இனிமேல் முதல்வருடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளனர். இதனிடையே போராட்டம் நடக்கும் ரிப்பன் மாளிகையில் இருந்து கலைந்து செல்லாவிட்டால் வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளனர்.
- நெல்லை ஆணவக் கொலை வழக்கில், கைதான சுர்ஜித்தின் சித்தி மகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
- சென்னையில் அறவழியில் போராடும் தூய்மைப் பணியாளர்கள் மீது போலீசார் கொடுங்கோன்மை போக்கினைக் கட்டவிழ்த்தால் மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- டில்லியில் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதி கவாயிடம் விலங்கின ஆர்வலர்கள் முறையிட்டனர். இதனை பரிசீலனை செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார்.
- இந்திய குடிமகள் ஆவதற்கு முன்பே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது எப்படி என்று பாஜ கேள்வி எழுப்பியுள்ளது.
- வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளின் நலனைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தி உள்ளது.
- திருப்பத்தூர் அருகே பள்ளி கிணற்றில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டு இரு வாரங்களாகியும், போலீசார் இந்த வழக்கை மூடிப் புதைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது போல் தெரிவதாக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் 21ம் தேதி ரஷ்யா செல்ல உள்ளார். அங்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளார்.
- 2030ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் முயற்சியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுக்குழு அங்கீகரித்துள்ளது.
- அமெரிக்காவில் உள்ள ஹிந்து கோவிலில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த நாச வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 13 August 2025 | Retro tamil
