- டில்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகள் பயன்படுத்தியது அம்மோனியம் நைட்ரேட்டை விட சக்திவாய்ந்த புதிய வெடிபொருளாக இருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் சோதனையில் தெரிய வந்திருக்கிறது.
- 12 பேரை பலி கொண்ட டில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கான திட்டம் துருக்கியில் தீட்டப்பட்டு இருக்கலாம் என்பது என்ஐஏ புலனாய்வு விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
- டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, இந்த சதிக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
- சதிச்செயல் நிகழ்த்த டாக்டர்களுக்கு பின்னணியில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் ஊழியரான இமாம் (மதகுரு) இர்பான் அகமது கைது செய்யப்பட்டுள்ளான்.
- டில்லியில் கார் குண்டுவெடிப்பை நிகழ்த்திய சதிக்காரர்கள் தீபாவளி பண்டிகைக்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர் என விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
- தமிழகத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- தவெகவின் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாமல், ‘எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது’ என்கிற அதிகார மயக்க முழக்கம் விட்டதாக திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
- 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட விசில் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி நடிகர் விஜயின் தவெக தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளது. புதியதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் எதன் அடிப்படையில் வழங்கப்படும் என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல்.
- விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி துன்புறுத்தியதாக பதிவான வழக்கில் குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய ஐ.பி.எஸ்., அதிகாரி பல்வீர் சிங் மனு செய்ததில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் அரசுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்க உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்தது.
- எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சீராய்வு பணியை உடனே கைவிட வலியுறுத்தியும், தமிழகம் முழுதும், தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 November 2025 | Retro tamil
