- அக்.,16 முதல் 18 ஆம் தேதிக்குள் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
- கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
- செங்கல்பட்டு, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், வரும் 12ம் தேதி, தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடக்கிறது.
- தன் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்துள்ளார்.
- சென்னையில் இன்று( அக் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1320 குறைந்து ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில் ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,720க்கு விற்பனை ஆகிறது.
- வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்துள்ளது.
- அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆசைப்பட்டு, நான் ஏழு போர்களை நிறுத்திவிட்டேன் என்று அதிபர் டிரம்ப் தம்பட்டம் அடித்தாலும், இந்தாண்டுக்கான பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை.
- நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வியன்னா-புதுடில்லி ஏர் இந்தியா விமானம் துபாயில் அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது.
- ஆப்கானிஸ்தானின் காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தை திறக்கும். என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
- நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கம் 2027ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.