- ராணுவத்திற்கு எந்த மதமோ ஜாதியோ கிடையாது என்று ராகுலின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
- ஓட்டு திருட்டு என்று கூறி ஜென் இசட் (GEN Z) எனப்படும் இளம் வாக்காளர்களை காங்கிரஸ் எம்பி ராகுல் தூண்டி விடுகிறார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
- தமிழகத்தில் இன்று (நவ., 05) முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- அமைதியாக இருந்த நேரத்தில் நம் மீது வன்ம அரசியல் பரப்பப்பட்டது. சட்டசபையில் பேசிய முதல்வர், அரசியல் காழ்ப்புணர்ச்சி, குறுகிய மனதுடன் குற்றம் சாட்டினார், என்று தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசினார்.
- ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுக்கள் திருடப்பட்டதாகவும், மொத்தம் உள்ள ஓட்டுகளில் 8ல் ஒன்று போலியானது என்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
- தமிழக முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்றும், கூட்டணி குறித்து முடிவு எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளித்தும், தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- அமெரிக்க பொருட்களுக்கான 24 சதவீத வரியை ஒரு ஆண்டுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீனா அறிவித்துள்ளது.
- அமெரிக்காவில் நடந்த தேர்தலில், பல்வேறு மாநிலங்களில் டிரம்ப் கட்சி (குடியரசு கட்சி) படுதோல்வி அடைந்துள்ளது.
- இரவு 11:35 மணி முதல், அதிகாலை 4 மணி வரை, 4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்துகொண்டு இருந்தது போலீஸ்? என்று கோவை பாலியல் வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்து உள்ளார்.
- சென்னையில் இன்று (நவ.,05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை ஆகிறது.
- புதிய விண்வெளி சகாப்தத்தில் நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் கூட்டாளியான ஜாரெட் ஐசக்மேனை அதிபர் டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

















