இன்று சாலையில் விபத்தில் காயமடைந்திருந்த ஒரு முதியவருக்கு உடனடி உதவி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அருகிலிருந்தவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து, அவர் விரைவாக மருத்துவ சேவை பெறச் செய்தோம்.
பொது வாழ்க்கையில் இருப்பவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவசர தருணங்களில் உதவி செய்ய முன்வருவது ஒவ்வொருவரின் சமூக பொறுப்பு என்று நான் நம்புகிறேன்.ஒரு உயிர் பாதுகாப்பாக இருக்க உதவியிருக்கிறோம் என்ற எண்ணமே மிகப்பெரிய திருப்தி.
நாம் எல்லோரும் முடிந்த உதவியை செய்ய தயங்காத மனசு வைத்திருந்தால் சமூகம் இன்னும் நல்ல இடமாக மாறும் – முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் விபத்தில் காயம் அடைந்த முதியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்ப உதவிய எம்எல்ஏ தளவாய் சுந்தரத்திற்கு பொதுமக்கள் பாராட்டு கன்னியாகுமரி மாவட்டம் ஆண்டார்குளம் பகுதியில் சேர்ந்தவர் கந்தசாமி இவர் தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளம் இடத்தை அடுத்த குமரன் புதூர் விலக்கு அருகே வந்து கொண்டு இருந்தார் அப்போது நாகர்கோவில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் அரசு பேருந்தின் ஓரத்தில் மோதியது இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த தங்க சுவாமி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அப்போது சகாய நகர் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்திற்கு செல்வதற்காக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் தனது காரில் சென்று கொண்டிருந்தார். விபத்தை பார்த்ததும் உடனே தனது காரை நிறுத்தி படுகாயம் அடைந்தவரை தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொன்னார். இதற்கிடையே தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் வரவே பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு எம் எல் ஏ தளவாய் சுந்தரம் மருத்துவமனைக்கு செல்ல உதவியதை அப்பகுதி மக்கள் பாராட்டினர்

















