அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 2013-ஆம் ஆண்டுமுதல் பணியில் சேர்ந்த பட்டியல் எழுத்தர்கள், உதவியாளர்கள், காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:- தமிழக அரசுக்கு டிஎன்சிஎஸ்சி எம்ப்ளாயீஸ் யூனியன் மாநில பொதுச்செயலாளர் சோம.அழகிரி கோரிக்கை:-
மயிலாடுதுறையில் உள்ள திமுக அலுவலகமான பகுத்தறிவு மன்றத்தில் டிஎன்சிஎஸ்சி எம்ப்ளாயீஸ் யூனியனின் மயிலாடுதுறை மண்டல செயற்குழுக் கூட்டம் மண்டல தலைவர் பொன்நக்கீரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சோம.அழகிரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சோம.அழகிரி கூறுகையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 2013-ஆம் ஆண்டுமுதல் பணியில் சேர்ந்த பட்டியல் எழுத்தர்கள், உதவியாளர்கள், காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு முழு முயற்சியுடன் பணியாற்றுவோம் என்றார்.
பேட்டி: மாநில பொதுச்செயலாளர் சோம.அழகிரி (டிஎன்சிஎஸ்சி எம்ப்ளாயீஸ் யூனியன்).
