திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பத்தில் அமைந்துள்ள சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் 13 மற்றும் 14 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று காலை சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வீரமுத்து அனைவரையும் வரவேற்றார். ஸ்ரீகாந்தி பரசுராமன் முன்னிலை வகித்தார்.இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார்.

அப்போது மாணவர்கள் இடையே உரையாற்றிய ராமதாஸ் இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வேண்டும். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அறிவுடை நம்பி பதிவாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு 2020-23 கல்வியாண்டில் பயின்ற 151 மாணவ மாணவியர்களுக்கும்., 2021 24 கல்வியாண்டில் பயின்ற 379 மாணவ மாணவியர்களுக்கும், 28.முதுகலை பட்டங்கள்,1 முனைவர் ஆராய்ச்சி பட்டம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறங்காவலர்கள், மருத்துவர். கோவிந்தசாமி, மருத்துவர் சுந்தரராஜன், முனைவர் சிவப்பிரகாசம், உயர்திரு பு.தா. அருள்மொழி, மருத்துவர் பரசுராமன், கல்லூரி முதல்வர். முனைவர் வீரமுத்து மற்றும் நிர்வாக அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், அலுவலக பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Exit mobile version