பூந்தமல்லியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட ஒடிசாவை சேர்ந்த மூன்று பேர் கைது செய்து அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஆவடி காவல் ஆணையர் கி சங்கர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் கஞ்சா முற்றிலும் ஒழிக்க காவல்துறையினர் பலப் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகசென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இ;ந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் சுபா~pனி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிலையம் அருகே பைபாஸ் சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று பேரைப் பிடித்து சோதனை செய்தனர்.
அவர்கள் கையில் இருந்த பையை ஆய்வு செய்தபோது அதில் கஞ்சா ஈர்ப்பது தெரியவந்தது. இதையடுத்து ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிபா பிஹாரா, ராமகந்த மாஜி மற்றும் அலெகா புஞ்சி ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
