சீர்காழி அருகே கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து திருடிய சிறுவர்கள் உள்ளிட்ட மூன்று பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற புலிஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 10 ம் தேதி உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் மூன்று பேர் திருடி சென்றது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வந்து எதிரிகளை தேடி வந்த நிலையில், இந்த குற்றத்தில் ஈடுபட்ட காரைக்காலை சேர்ந்த வெற்றி(19) மற்றும் இரண்டு இளம் சிறார்கள் என தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் இவர்கள் கடந்த மூன்று மாத காலமாக காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை ,கடலூர் மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கோயில் உண்டியலை உடைத்து தொடர்ச்சியாக திருடி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து புலீஸ்வரி அம்மன் கோயிலில் திருடிய பணம் மற்றும் சில்லறை காசுகள் 3202 ரூபாய் கைப்பற்றப்பற்றினர். அதனுடன் திருட்டிற்கு பயன்படுத்திய சுத்தியல்,உளி மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய பல்சர் இருசக்கர வாகனம் ஆகியவைகளையும் பறிமுதல் செய்தனர்.
















