சீர்காழி அருகே திருநாங்கூரில் 132 வது ஆண்டு 11 தங்க கருட சேவை உத்ஸவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சீர்காழி அருகே திருநாங்கூரில் 132 வது ஆண்டு 11 தங்க கருட சேவை உத்ஸவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருளினர் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழுக்கமிட்டு வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் 108 வைணவ திவ்யதேசங்கள் ஸ்ரீநாராயணபெருமாள், குடமாடகூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்டபெருமாள், அண்ணன்பெருமாள், புருஷோத்தம பெருமாள், ஸ்ரீவரதராஜ பெருமாள், ஸ்ரீவைகுந்தநாதன் ஸ்ரீமாதவபெருமாள், பார்த்தசாரதி, ஸ்ரீகோபாலன், உள்ளிட்ட 11 திவ்யதேச கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் தை அம்மாவாசை மறுநாள் பிரசித்திபெற்ற 11 கருடசேவை உத்ஸவம் நடைபெறும். இவ்வாண்டு 132ம் ஆண்டு கருடசேவை உத்ஸவம் நடைபெறுவதை முன்னிட்டு 11 பெருமாள்களும் திருநாங்கூர் மணிமாடக்கோயிலில் எழுந்தருள சிறப்புத்திருமஞ்சணம் செய்யப்பட்டது.இரவு 12:30மணிக்கு மணிமாடகோயில் கோபுரவாயிலில் மணவாள மாமுணிகளும், ஹம்ஸவாகனத்தில் குமுதவள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளினர். தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்ககருட வாகனத்தில் எழுந்தருளினர்.அவர்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது,அப்போதுஅங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களைபாடி பெருமாள்களை சேவித்தனர்.தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்ககருடவாகனத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது. தமிழகம் மட்டுமன்றி பல மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர்.

Exit mobile version