போதையால் தடுமாறுபவர்கள் தன்னைத்தானே திருத்திக் கொள்ளாவிட்டால் வாழ்வில் முன்னேற வாய்ப்பு இல்லை. கடமை கண்ணியம் கட்டுப்பாடு இந்த மூன்று உணர்வுகள் இருந்தால் வெற்றி கிடைக்கும் என்று மயிலாடுதுறையில் குடியரசு தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் விழாவில் ஏடிஎஸ்பி அறிவுரை;-
77 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் ட்ரீம்ஸ் இந்தியா ஃபவுண்டேஷன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, மதுவிலக்கு பிரிவு காவல்துறை இணைந்து சிறந்த மாணவர்களுக்கு வெற்றி கொடி கட்டு, தூய்மை பணியாளர்களுக்கு தங்கமகள் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சமூக நல்லிணக்கம் தமிழ் மொழி பற்று மற்றும் நாட்டுப்பற்று வளர்த்ததளுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் இன்றைய மாணவர்கள் அரசாங்கத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவது என்ற தலைப்பில் மாவட்ட தேர்தல் சிறப்பு தாசில்தார் விஜயராகவன் தலைமை உரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாகை கடலோர காவல் குழும ஏ.டி.எஸ்.பி சிவசங்கர் பங்கேற்று போதையால் பாதை மாறும் இளைஞர்களை சரி செய்வது எப்படி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி பேசுகையில் கூறியதாவது கடமை கண்ணியம் கட்டுப்பாடு இந்த மூன்று உணர்வுகள் மற்றும் நம் வாழ்விலே இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பதை இளைஞர்கள் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும். போதையால் தடுமாறுபவர்கள் தன்னைத்தானே திருத்திக் கொள்ளாவிட்டால் வாழ்வில் முன்னேற வாய்ப்பு இல்லை. டாஸ்மார்க் கடையை திறந்து வைத்து விட்டு குடிக்க கூடாது என்று கேட்கிறார்கள். குடிப்பழக்கம் குடியை கெடுக்கும் என்று டாஸ்மார்க் கடையில் விளம்பரப்படுத்தி மது விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மார்க் கடை இல்லாவிட்டால் குடிமகன்கள் குடிப்பதை நிறுத்தி விடுவார்களா என்று பட்டிமன்றம் வைத்து பேசலாம். குடிப்பவர்களுக்கு மது எங்கே விற்கிறது என்று நன்றாக தெரியும். காட்டில் விற்றால் கூட தேடி செல்வார்கள், குடிப்பழக்கம் உள்ளவர்கள் தன்னைத் தானே திருத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் செல்போன் குழந்தைகளின் மனநிலையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. எம்ஜிஆர் குடித்ததாக சாட்சிகள் இல்லை. ஆசை நூறு, வகை, சொர்க்கம் மதுவிலே, குடிமகனே பெருங்குடி மகனே போன்ற திரைப்பட பாடல்கள் வாயிலாக சமுதாயத்தில் பல தீய கருத்துகளை திணித்துள்ளனர். ஆனால் எம்ஜிஆர் கருத்துள்ள பாடல்களை தந்து இளைஞர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்துள்ளார். எம்ஜிஆரின் பாடல்கள் என்னை வளர்த்தது அதுபோன்று பாடல்களை குழந்தைகள் கேட்க வேண்டும் என்றார். முன்னதாக இன்றைய மாணவர்களுக்கு தேவையான தாய்மொழி பற்று மற்றும் நாட்டுப் பற்று குறித்து தமிழ் பேராசிரியர் தமிழ்வேல் என்பவரும் ட்ரீம்ஸ் இந்தியா நிறுவனர் விஜயன் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்பு குறித்து கருத்துரை வழங்கினர். நிறைவாக மாணவர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் சான்றிதழ் விருதுகள் வழங்கப்பட்டன.

















