திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் வரம்புமீறி பேசியும், உதவி வாறியாளரை தாக்கியும் வன்முறை செயலில் ஈடுபட்டு வரும் இவரை பணி நீக்கம் செய்ய கோரி…
தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்வேறு பணிகள் பாதிப்பு..
திருவாரூர் செப்,15-
திருவாரூர் மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி பிரிவின் செயற்பொறியாளர் இளஞ்சேரன் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் பொறியாளர்களை தரக்குறைவாக பேசியும் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு தாக்கி வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்… எனவும், படித்த பொறியாளர்களை களப்பணி ஆய்வின்போது ஆய்வுக் கூட்டங்களிலும் அநாகரிகமாக பேசி வருகிறார்… எனவும், மேலும் உதவி பொறியாளர் முத்தரசன் மீது தாக்கியதை கண்டித்தும் அரசு ஊழியரின் நன்னடத்தை விதிகளை மீறி செயல்படும் இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி…
திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள திருவாரூர், குடவாசல், நன்னிலம், வலங்கைமான், கொரடாச்சேரி,நீடாமங்கலம், மன்னார்குடி,கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தால் திருவாரூர் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம், வீடு கட்டும் பணிகள், 100 நாள் வேலை திட்டம், குறிப்பாக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செயற்பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் மாவட்ட தலைவர் என். வசந்தன்,மாவட்ட செயலாளர் டி.ஜெ.அமர்நாத்,மாவட்ட பொருளாளர் எஸ். சிவக்குமார்,கே.எஸ்.செந்தில், மாநில செயலாளர்,மாநில துணைதலைவர்சௌந்தரபாண்டியன்,ஜம்ரூத்நிஷா, மாநில மகளிர் துணைக்குழு அமைப்பாளர், புஷ்பநாதன், மாநில தணிக்கையாளர் ,
தமிழ்செல்வன்மாவட்ட தலைவர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
