திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின்  கூட்டமைப்பு சார்பாக மாவட்ட தலைநகர் தர்ணா போராட்டம்

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட தலைநகர் தர்ணா போராட்டம் நடைபெற்றது..

 தமிழ்நாடு முழுதும்... கிராம உதவியாளர், புல உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், நில அளவர் உள்ளிட்ட வட்டாட்சியர் வரை சுமார் 42000 வருவாய் துறையினர் பங்கேற்கும் இந்த தர்ணா போராட்டத்தின் ஒரு பகுதியாக.
 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக.அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களுக்கும் உழைப்பிற்கேற்ற மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.. உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
 தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில்..
 "அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கான சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடன் இயற்ற வேண்டும்.
  பணித்தன்மை மற்றும் பணி பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை வருவாய் அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் உடன் வழங்கிட வேண்டும்.
  ஒப்பந்த, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட்டு நிரந்தர அடிப்படையில் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
 கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக நினைவு செய்திட வேண்டும்.
உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 இந்த நிகழ்வில்.. நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்,கிராம ஊழியர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் தக்ஷிணாமூர்த்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மகேஷ், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து வருவாய் சங்கங்கள் சார்ந்த அரசு ஊழியர்கள்  ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Exit mobile version