திருவாரூரில் கள்ளக்காதல் தொடர்பாக மனைவி மற்றும் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய கணவரை நகர காவல்துறையினர் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் அகரகடம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி மகள் ஆர்த்தி (27) என்பவரும் தருமபுரியை சேர்ந்த செல்வம் மகன் சுதாகர் (30) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் காரணமாக இருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒன்னறை வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்து வருகிறது.
சுதாகர் தற்போது சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருவதாக கூறப்படும் நிலையில் குடும்ப வருமானத்திற்காக மனைவி ஆர்த்தியும் தனது தந்தை வீட்டில் தங்கியிருந்தவாறு திருவாரூர் வடக்கு வீதியில் இருந்து வரும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் திருவாரூர் அருகே திருநெய்ப்பேர் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகனும் மேற்படி ஆர்த்தி பணியாற்றி வரும் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்துவருபவருமான சந்தோஷ் (25) என்பவருக்கும், ஆர்த்திக்குமிடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது ஆர்த்தியின் கணவர் சுதாகருக்கு தெரியவரவே அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். இதனையடுத்து இரு குடும்பத்தினர் மற்றும் ஊர் பெரியவர்கள் ஒன்று சேர்ந்து சமாதானம் பேசி இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் மனைவியின் கள்ளக்காதல் தொடர்ந்த நிலையில் இருவரும் தினந்தோறும் பணி முடிந்த பின்னர் ஒன்றாக சேர்ந்து பல இடங்களுக்கு சென்று வருவது சுதாகருக்கு மீண்டும் தெரியவரவே கையும் களவுமாக இருவரையும் பிடிப்பதற்காக இன்று ஆர்த்தி வேலை பார்த்து வரும் நிதி நிறுவன வாசலில் சுதாகர் மறைந்தவாறு நின்றுள்ளார். அப்போது இரவு 7 மணியளவில் ஆர்த்தியும், அவரது கள்ளக்காதலரான மேலாளர் சந்தோஷ் இருவரும் நிதி நிறுவனத்தை விட்டு வெளியே வந்து கார் ஒன்றில் ஏறியுள்ளனர்.
அப்போது அந்த காரை நிறுத்தி இருவரையும் கீழே இறக்கிய சுதாகர் தான் வைத்திருந்த அரிவாளால் இருவரையும் வெட்டியுள்ளார். இதில் இருவரும் அலறி அடித்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடியுள்ளனர்.
மேலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்து வரும் வடக்கு வீதியில் இது போன்ற ஒரு சம்பவம் நடுரோட்டில் நடந்ததை அறிந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக திருவாரூர் நகர காவல்துறையினருக்கு தெரிவிக்வே உடனடியாக சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர் சுதாகரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பேட்டி பார்த்தசாரதி ஆர்த்தியின் தந்தை.

















