திருவாரூர் மாவட்டத்தில் 1,29,480 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். SIR க்கு முன் 10 லட்சத்து 75 ஆயிரத்து 577 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 9 லட்சத்தி 46 ஆயிரத்து 97 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்பு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் திருவாரூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதில் திருவாரூர் மாவட்டத்தில் SIR க்கு முன் 522982 ஆண் வாக்காளர்கள், 552526 பெண் வாக்காளர்கள், 69 இதர வாக்காளர்கள் என மொத்தம் 1075577 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது SIRக்கு பின்
465933 ஆண் வாக்காளர்கள், 480111 பெண் வாக்காளர்கள், 53 இதர வாக்காளர்கள் என மொத்தம் 946097 வாக்காளர்கள் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 1,29,480 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 46942 நபர்கள் இறந்தவர்கள், 24845 நபர்கள் கண்டறிய முடியாதவர்கள், 51935 இடம் பெயர்ந்தவர்கள்,5350 இரட்டை பதிவு பெற்றவர்கள், 408 இதர இனங்கள் என மொத்தம் 129480 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 2 லட்சத்து 86 ஆயிரத்து 973 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 37,937 வாக்காளர்கள் நீக்கப்பட்டு 2,49,036 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர்.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 2 லட்சத்து 43 ஆயிரத்து 519 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 25733 வாக்காளர்கள் நீக்கப்பட்டு 2,17,786 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 2 லட்சத்து 60 ஆயிரத்து 397 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 36,922 வாக்காளர்கள் நீக்கப்பட்டு 2 லட்சத்து 23 ஆயிரத்து 475 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நன்னிலம் சட்டமன்றம் தொகுதியில் ஏற்கனவே 2 லட்சத்து 84 ஆயிரத்து 688 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 28,888 வாக்காளர்கள் நீக்கப்பட்டு 2 லட்சத்து 55 ஆயிரத்து 800 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பேட்டி : மோகனசந்திரன் – திருவாரூர் மாவட்ட ஆட்சியர்
















