திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையையே சிவனாக வழிபடுவதால் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2.43 மணி முதல் மறுநாள் 9-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 2.18 மணிவரை உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Exit mobile version