இந்து சமய அறநிலையத்துறை யின் இணை ஆணையர் அலுவலகம் வேலூரில் இயங்கி வந்தது.இன்னிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கென தனி அலுவலகம் வேண்டி பல்வேறு தரப்பினர் இந்துசமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைத்ததை தொடர்ந்து திருவள்ளுரில் அற நிலையத்துறையின் அலுவலகம் உருவாக்கப்பட்டு அதன் திறப்பு விழா திருவள்ளுரில் நடைபெற்றது.
இந்த திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதாப், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சந்திரன்,வி.ஜி.ராஜேந்திரன்,ஆ.கிருஷ்ணசாமி, டி.ஜே.கோவிந்தராஜன்,துரைசந்திர சேகர்,இணை ஆணையர்கள் அனிதா,ரமணி உள்ளிட்ட அரசு அலுவலர்களும்,திமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.


















