இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலை அரங்கில் துவங்கியது தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பல்வேறு கூட்டணி கட்சியின கட்சி தலைவர்கள் பங்கேற்று உரையாற்று வருகின்றனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று மாலை விழாவுக்கு நேரில் வந்து விழா சிறப்புரை ஆற்றினார், இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன்;
பிரதமர் சுதந்திர தின விழாவில் ஆர்எஸ்எஸ் பற்றி பேசுவது ஏற்புடையது அல்ல. அந்த இயக்கம் அந்த இயக்கம் என்று, ஒரு முறைக்கு பலமுறை இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம் சிறுபான்மை சமூக இனத்தவர்களுக்கு எதிராக இருந்து வருகிறது.
அரசியலை புதைத்து வருகிற இயக்கம் மதத்தின் பெயரால் இந்து பெரும்பான்மை வாதம் என்கின்ற அடிப்படையில் சாதி பெருமைகளை பேசி இந்துக்களை வாக்கு வங்கிகளாக திரட்டுகின்ற ஒரு இயக்கம் ஆர் எஸ் எஸ். இந்திய மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்துகின்ற பிளவு வாத இயக்கம் ஆர்எஸ்எஸ் அப்படிப்பட்ட இயக்கத்தினை 140 கோடி மக்களுக்கான தலைமை அமைச்சர் பிரதமர் சுகந்திர தின விழாவிலே பாராட்டி பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அவர் பாஜக மேடையில் பேசுவது யாரும் அவளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை. ஆர் எஸ் எஸ் மேடைகளில் போய் பாராட்டி பேசுவதை யாரும், பெரிதாக நினைப்பதில்லை, அரசு விழாவில் ஒரு இயக்கத்தை உயர்த்தி பிடிப்பது எப்படிப்பட்டதாய் இருக்கிறது.
இந்தப் போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி கருதுகிறது. தூய்மை பணியாளர் தனியார் மயம் படுத்துவது என்பது அங்கு இங்கு எல்லா பகுதிகளிலும் தமிழ்நாடு அரசு துறைகளிலும் இந்திய ஒன்றிய அரசு துறைகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் மையப்படுத்துவதை ஒட்டுமொத்தமாக நாம் எதிர்க்க வேண்டும். ஆனால் ரயில்வே துறை விமானத்துறை வங்கிகள் இதுபோன்ற பல பொது துறை நிறுவனங்களை தனியார் மையப்படுத்தப்பட்டு வருகிறது.
நிலைப்பாடு என்ன இந்திய பொதுத்துறை பங்குகளை இந்திய ஒன்றிய அரசு விற்பனை செய்து வருகிறது. இது குறித்து நம்முடைய நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுகிறது. அந்த அடிப்படையில்தான் மாநில அரசுகளும் ஒவ்வொரு துறைகளிலும் ஒப்பந்த அடிப்படை முறை என்ற முறையில் தனியார்யிடம் ஒப்படைத்து வருகிறது.
அதிமுக ஆட்சியின் போது சென்னை மாநகராட்சியை மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் பதினோரு மண்டலங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. இஞ்சி உள்ள நான்கு மண்டலங்களில் இரண்டு மண்டலங்களில் இந்த அரசு இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. என்பது தெரிய வருகிறது உடனடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து அடுத்த நாளே முதலமைச்சரை சந்தித்து அமைச்சர் தனியார் ஒப்படைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்
மேலும் தொடர்ந்து தலைமை நீதிபதி விசாரித்து உயர்நீதிமன்ற வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசும் காவல் துறையும் அனுமதி இல்லாத இடத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர் அவர்களை அற்புதப்படுத்தி உள்ளனர் என தெரிவித்த மேலும் மேகாலந்து ஆளுநர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.