திருக்குளத்தை வேங்கடவானன் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் 86வது திவ்ய தேசமாகும். நவ திருப்பதிகளில் 7வது திருப்பதி நவகிரங்களில் சனி பகவானுக்குரிய தலமாகும்.
இத்திருக்கோவில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 38 கிலோமீட்டர் தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருப்புளியங்குடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
வேதாசரன் என்ற அந்தணருக்குப் பிறந்த கமலாவதி என்ற பெண் பகவானை குறித்து தவம் செய்ய பகவான் காட்சி கொடுத்து விவாகம் செய்து கொண்டதாக தலவரலாறு கூறுகிறது . தவம் செய்த இடம் என்பதால் பாலிகைவனம் என்று அழைக்கப்படுகிறது.

இங்கு அச்மஸாரன் என்னும் அசுரன் பகவானுடன் யுத்தம் செய்ததாகவும் பகவான் அவனை வீழ்த்தி அவன் மேல் நாட்டியமாடி அழித்தாகவும் புராணங்கள் கூறுகின்றது. தேவர்கள் பிராத்தனைப்படி மயாக்கூத்தன் என்ற திருநாமம் பெற்றார். இத்தலத்தில் கருடன் பெருமாளுடன் உற்சவராக பக்கத்தில் காட்சியளிக்கிறார்.
இந்த தலத்தில் வேங்கடவாணன் பெருமாள் ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் கிழக்கே திருமுக மண்டல நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இப்பெருமானை அவரவர்க்குள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிப்பட்டால் கிரக தோஷம் நீங்கும்.
சோழ நாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல்படுவதால் நவகிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப்படுவதில்லை.