திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள மேலநத்தம் கிராமத்தில் ஸ்ரீ காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் 10 தினங்கள் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. இதில் சூரசம்ஹாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தினர். அதனை தொடர்ந்து உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை மணமேடையில் எழுந்தருளச் செய்தனர். சுவாமிக்கு பக்தர்கள் சீர்வரிசை கொண்டு வந்து வைத்தனர். அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ஹோம குண்டம் அமைத்து அதில் பூஜைகள் நடத்தினர். பின்னர் கங்கணம் கட்டுதல், சங்கல்பம், திருமாங்கல்யம் அணிவித்தல் ஆகியவை நடத்தப்பட்டு மாலை மாற்றுதல் வைபவம் நடத்தினர்.
