திருஇந்தளுர் பரிமளரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் மங்களகிரி படிச்சட்டத்தில் எழுந்தருளினார்

மயிலாடுதுறை அடுத்த திருஇந்தளூரில் பிரசித்தி பெற்ற பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது, பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுல் இது, ஐந்தாவது ஆலயமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வதுமான இந்த ஆலயத்தில் ஏகாதேசியை முன்னிட்டு, இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெருமாள் மங்களகிரி படிச்சட்டத்தில் புஷ்ப அலங்காரத்தில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், பெருமாள் பாசுரங்களை பட்டாச்சாரியார்கள் பாடினர். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது .அதனை அடுத்து பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் காலை 5.18 மணிக்கு திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Exit mobile version