கோட்டூர் ஒன்றியத்திலிருந்து திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர் .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் , கழக அமைப்புச் செயலாளர் , திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.காமராஜ் தலைமையில் கோட்டூர் வடக்கு ஒன்றியம் ஆதிச்சபுரம் ஊராட்சியில் இருந்து கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கட்சிகளிலிருந்து சுமார் 25 குடும்பங்கள் அக்கட்சியிலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மாப் பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம் , கோட்டூர் வடக்கு ஒன்றிய கழகசெயலாளர் ப.இராஜாசேட் , கோட்டூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.வீ.ஜீவானந்தம், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் மா.கோபாலகிருஷ்ணன் , கோட்டூர் வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் சேரி.எஸ்.கண்ணன் , மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் கூட்டுறவு சங்க செயலாளர் வீ.பழனிவேல், மாவட்ட பிரதிநிதி எஸ்.சித்திவிநாயகம், கோட்டூர் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கே.செல்வராஜ் , மாவட்ட கலை பிரிவு துணை தலைவர் தங்க.கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோட்டூர் வடக்கு ஒன்றிய பாசறை செயலாளர் ஏ.ஜெ.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
















