நாட்டில் வெறிநாய்க்கடி அதிகரித்து, அதனால் ரேபிஸ் நோயால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், உச்சநீதிமன்றம் தானாகவே வழக்கு பதிவு செய்து விசாரித்தது.
முதலில், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, ஆர்.மஹாதேவன் அமர்வு, டில்லி நகரில் சுற்றித்திரியும் தெரு நாய்களை எட்டு வாரங்களுக்குள் பிடித்து, காப்பகங்களில் வைக்க உத்தரவிட்டிருந்தனர். மேலும், அவற்றுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் டில்லி அரசு மற்றும் மாநகராட்சிக்கு உத்தரவு வழங்கப்பட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டதால், நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு மீண்டும் விசாரணை நடத்தி இன்று (ஆகஸ்ட் 22) தீர்ப்பு வழங்கியது.
அதில்,
- தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க தேவையில்லை; ரேபிஸ் பாதிக்கப்பட்டவை மற்றும் ஆக்கிரமிப்பு நாய்கள் மட்டுமே காப்பகங்களில் வைக்கப்பட வேண்டும்.
- பிடிக்கப்பட்ட நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு மீண்டும் விடுவிக்க வேண்டும்.
- தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவு வழங்கக் கூடாது.
இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.