சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

தரங்கம்பாடி அருகே சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்கலத்தில் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் ஆடி 18 தீர்த்தவாரி விழா நடைபெற்றது தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மகிமலையாறு வாடி ஆற்றங்கரையில் அம்மன் எழுந்தருளி காட்சியளிக்க அஸ்திரதேவிக்கு பால், தேன், பன்னீர், சந்தனம், திரவிய பொடிகள், உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆற்றங்கரையில் தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Exit mobile version