மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலய குடமுழுக்கு விழா வரும் 28ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி இன்று யாகசாலை பூஜை தொடக்கம்…
தமிழகத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த வைணவ தலங்களில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால சுவாமி கோயிலும் ஒன்றாகும். குலோத்துங்க சோழனின் விண்ணகரம் எனவும், தென்னகத்து தெட்சின துவாரகை என்றும் பக்தர்களால் போற்றப்படுவதுமான இவ்வாலயத்தின் மஹா ஸம்ப்ரோஷனம் எனும் மகா கும்பாபிஷேகம் வரும் 28ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடைபெற உள்ளன. இதனையொட்டி இன்று மன்னார்குடி பாமனியாற்றில் இருந்து ஆலய செங்கமங்கலம் யானை பரிவாரத்துடன் புனித தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து முதல்கால யாகசாலை பூஜைகள் வேத மந்திரங்கள் முழங்க தொடங்கப்பட்டது. முன்னதாக ராஜகோபுரத்திற்கு பால், மஞ்சள் , சந்தனம் அபிஷேகம் செய்து பிரதிஷ்டை செய்யபட்டது அதனைதொடாந்து மஹா ஸம்ப்ரோஷனத்தையொட்டி ஆலய பிரகாரத்தில் 3500 சதுரடி பரப்பளவில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு 5 காலமாக யாகசாலை பூஜைகள் மேற்கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகம் விரிவாக செய்துள்ளது. மேலும் யாகசாலையில் யாகவேள்வி பூஜை மேற்கொள்ள ஏதுவாக 60க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் 30க்கும் மேற்பட்ட யாககுண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்பது குறிப்பிடதக்கது
